நவீன வசதிகளுடன் யாஹூ மெயில்

மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ(YAHOO) மெயில் சேவையானது பல நவீன  வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.
2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு – ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.சமூகவலைப்பின்னல் தொடர்பு – யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM (Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி. இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் – பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும். ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு – ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது. கூகுள்,  க்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment